முழு பாட்டு கேக்கும் போதும் நியாபகம் இல்லாத பாடல் வரிகள் இருந்தும், சில வரிகள் மட்டும் உதட்டிலும் ,மனதிலும் ஒலித்துகொண்டே இருக்கும்.அப்படி ஒலிக்கும் 2000 - 2023 இல் வெளியான சில பாடல் வரிகளை பற்றி பார்போம்.
- படம் : வாமணன் - 2009
பாடல்: "ஒருதேவதை பார்க்கும் நேரம் இது".
இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பாடல் வரி:
" மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்"
இந்த வரிகளை பாடாத காதல் ஜோடிகளே கிடையாது அதிலும் ஒரு தலை காதல் கொண்டவர்கள் இந்த பாடலை கொண்டடுவார்கள். இந்த பாட்டுக்கு விளக்கம் தேவைபடாது சிம்பிள் ஆனா வரிகளில் தான் இருக்கும்.
2. படம்: மரகத நாணயம் - 2017
பாடல் : "நீ கவிதைகளா கனவுகளா கயல் விழியே "
இசை அமைப்பாளர் : திபு நினான் தாமஸ்
பாடல் வரி :
" உன்னோடு நெஞ்சம் உறவாடும் நேரம்
தண்ணீர் கமலம் தானா ".
இந்த ஒரு லைன் கேக்கும் போது மட்டும் மனசு நம்ப கட்டுப்பாட்டுல இருக்காது, காதல் தோல்வி இருந்தா இந்த பாட்டு ரொம்பவே அழுத்தத்த தரும்,
இந்த வரியோட அர்த்தம் என்னன்னா , உன்ன பத்தி நெனச்சாவே ஏன் மனசு தண்ணிய போல தலும்புதுன்னு அர்த்தம்.கமலம் என்றால் முனிவர்கள் கையில் வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரம்.
3. படம் : அயன் - 2009
பாடல் : " பல பலக்குற பகலா நீ "
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரி :
"எட்டி தொடும் வயசு இது ஒரு வெட்டு கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்வென்றால் அதில் இரு பக்கம் கூர் இருக்கும்".
"கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும்".
" புலன்களை அடைக்கி வைத்தால் தினம் புது புது சுகம் கிடைக்கும்".
இந்த பாடல் வரிகள், என் வாழ்க்கையில் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திவிட்டது,
துன்பம் வரும்போதெல்லாம் நான் என்னை தட்டி கொடுக்க இந்த பாடல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. motivation பாடல் என்றாலே முதலில் இளைஞர்கள் playlist இல் இருந்து play செய்யும் முதல் பாடல் இந்த பாடல் மட்டும் தான்.
இறுதியாக இரு பாடல்கள் பற்றி பார்போம் , அம்மா வை, மீண்டும் மீண்டும் அவள் படும் கஷ்டங்களை நினைவுபடுத்தும் ஒரு பாடல் ,
வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒலிக்கும் "அம்மா அம்மா நீ எங்கே அம்மா"இந்த பாடல் உலகில் யாராலும் மறக்க முடியாத ஒரு பட்டாக இருக்கும் . . .
இரண்டாவது பாடல் " கேடி பில்லா கில்லாடி ரங்கா " படத்தில் ஒலிக்கும் " தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தையின் அன்பின் முன்னே " இது பாடல் அல்ல தந்தையில் உணர்வுகளை , தந்தையின் கடமைகளை , தந்தையின் அன்பை எடுத்து சொல்லும் அழகான கவிதை…
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் என்னுடைய வலைதளத்தை
follow செய்யவும். நன்றி
