பள்ளி முடிந்ததும் ஓடிவந்தான். பேரின்பன் , புத்தகப் பையை தூக்கி போட்டு விட்டு கோபத்துடனே வீடு முழுவதும் சுற்றினான்.
அம்மா, அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே சமையலறையில் தேடினான் கிடைக்கவில்லை, குளியலறையில் தேடினால் அங்கேயும் இல்லை, படுக்கை அறைக்குள் பார்த்தால் அங்கேயும் தென்படவில்லை, ஓய்வறையில் பார்த்தான் காணவில்லை, புத்தக அறையில் தேடினான் கண்ணில் பட்ட பாடு இல்லை, ஒருவேளை விருந்தினர் அறையில் இருப்பாளோ என்று அங்கேயும் ஓடினான், தோட்டத்தை சுற்றி சுற்றி தேடினான் கிடைக்க வில்லை கோட்டை போன்ற பளிங்கு வீட்டில் முற்றிலும் தேடினால் எங்கேயும் காணவில்லை இறுதியாக மொட்டை மாடியில் அம்மாவை பார்த்தான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எதுக்குமா?
அப்பாவிற்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தீர்கள் என்றான்.
சிரித்தபடியே புஷ்பா சொன்னால் அதை போய் உன் பாட்டியிடம் கேள் என்றால்.
தலைதெறிக்க இறங்கிவந்து பாட்டி பாட்டி என்றே தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான்.
சந்தன மரத்தில் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியில் விட்டத்தையும் சுவற்றினையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தி.
எதுக்கு பாட்டி,
என் அப்பாவிற்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தீர்கள் பள்ளியில் எனது நண்பர்கள் கொடி கொடி என்று கிண்டல் அடிக்கிறார்கள் என சொல்லிக் கொண்டே புதிய பொம்மையை பார்த்ததும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
சாந்தி விட்டத்தைப் பார்த்தபடி நினைவுகளை அசை போட்டாள்.
என்னங்க, நமக்கு கல்யாணம் நடந்து மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி இரண்டு பசங்க இருக்காங்க வயித்துல ஒரு ஜீவன் பசியில துடிக்குது ,
என்ன பண்ணப் போறோம் ? கவலைப்படாத நீ என் மார்பில் சாய்ந்து இருக்கிற வரைக்கும் எத்தனை சோதனை வந்தாலும் தாங்குவேன்.
சற்று நேரத்திற்குள் பாவாடை சாமி
அடேய்
பாவாடை சாமி
வாடா வெளியே,
வாடகை கொடுக்க வக்கில்லை இதுல பைய பேரு கோடீஸ்வரன் வெளியே வாடா பிச்சைக்காரா.
மார்பில் சாய்ந்த சாந்தி நிமிரவே
மழமழ வென கண்களில் கண்ணீர் சுரந்தது.
பாவாடை சாமி வெளியே வந்தான் கெஞ்சினான். வீட்டு முதலாளியோ மிஞ்சினான்.
ஒருவழியாக வீட்டிற்கு உள்ளே வந்தான் பாவாடை சாமி.
சாந்தி அவனை சமதானப் படுத்தினாள். விம்மி விம்மி அழுதான் கண்களை துடைத்துக்கொண்டே பக்கத்து வீட்டில் இரவலாக ஊசி வாங்கி வந்தான்.
தான் கட்டியிருந்த வேட்டியை கழற்றி தறித்த வேட்டியின் நூலை தனியே பிரித்து ஊசி கூத்து சாந்தியின் கிழிந்த ரவிக்கைக்கு ஒட்டு போட்டான்.
ஒட்டு போட்ட கையோடு பச்சைத் தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டு சென்றான். வேலைத்தேடி நாட்கள் ஓடியது ஆனால் தன்னம்பிக்கை உழைப்பு மட்டும் அவனுடனேயே இருந்தது வேலை கிடைத்தது. வியாபாரம் பெருகியது வெற்றிப் பாதையில் பயணம் தொடர்ந்தது குடிசை கோட்டை ஆனது.
கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்து கொண்டே அந்த கோட்டையில் சாந்தி நிம்மதியை தேடி கொண்டிருந்தாள்.
அம்மா அம்மா என்ற ஒரு குரல்,
சாந்தியின் மகள் ,
அம்மா வா மா சாப்பிடலாம் என்றாள்.
தழுதழுத்த குரலில் சாந்தி சொன்னாள்.
என் தெய்வத்தின் போட்டோயோடு என்னையும் சேர்த்து வைத்து விடுமா என்றாள்.
அம்மா,
எட்டு வருஷமா தினமும் ஓயாம இதையேத்தா சொல்லிக்கிட்டு இருக்க வா வந்து சாப்டு நிம்மதியா தூங்கு மா என்றால் பொன்னம்மா.
மறுநாள் காலை,
பாவாடைசாமி சாந்தி படம் ஒன்றானது.
இவண்.
வைத்தியம்இரா. இளங்கோ.