19-oct-2023 அன்று நான் எனது நண்பன் இருவரும் கம்பெனி வேலையாக தூத்துக்குடி புதுபேட்டை பகுதிக்கு சென்றிருந்தோம், அங்கே நான் சென்றிருந்த இடத்திற்கு அருகே பைக் பார்க்கிங் இடத்தில் நின்று கொண்டிருந்தேன், அதன் அருகில் சாலை ஓரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த கார் ஓட உரிமையாளர் தன் கையில் வைத்திருந்த பொருளை அந்த காரில் வைத்துக் கொண்டிருந்தார், ஏதோ சத்தம் கேட்டு அந்த காருக்கு அடியில் அவர் குனிந்து பார்த்தார் கீழே ஒரு பூனைக்குட்டி விளையாடிக் கொண்டிருந்தது, அவர் அந்த காரை எடுத்துச் செல்ல அவசியம் இருந்ததால் அவர் அந்த பூனை குட்டியை விரட்டிக் கொண்டிருந்தார், நான் அதை தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த பூனைக்குட்டி அந்த காரின் அடிப்பகுதியிலேயே ஏற முயற்சித்துக் கொண்டிருந்தது, அந்த காரின் உரிமையாளர் மீண்டும் காரின் கிழே குனிந்து பார்த்தார் ஆனால் அங்கே பூனை அவர் கண்ணில் படவில்லை, ஒருவேளை அது அங்கிருந்து போய்விட்டது என அவர் காரை எடுக்க தயாரானார், ஆனால் அந்த குறும்புத்தன பூனைக்குட்டி காரின் அடியில் ஏறிவிட்டது அதை நான் கவனித்தேன் , காரை அந்த உரிமையாளர் நகர்த்தினர் நான் திடீர் என்று காரை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டேன் அந்த பூனைக்குட்டி காருக்கு அடியில் தான் இருக்கு வண்டியை நிறுத்துங்க என்று சொல்வதற்கு, ஆனால் அந்த பூனைக்குட்டி வண்டி நகர்வதை உணர்ந்து காரின் பின் டயர் முன்னாடி நகர்வதிற்குள் துள்ளி குதித்து காரில் இறங்கி ஓடிவிட்டது.
பொதுவாக இங்கு நான் சொன்ன இந்த உண்மை நிகழ்வில் நடந்தது என்ன, இதை ஏன் எனது இணையபக்கத்தில் பதிந்தேன்.
உணவு அதை தேடி ஒரு பூனைக்குட்டி, காரை எடுக்க அவசியம் இதை நாடி அந்த உரிமையாளர், இந்த இரண்டு உயிர்களுக்குமே