அவள் முதல்ப்பார்வை
முள் போலே, தொட்டவுடன்
நெஞ்சை குத்துதே !
அவள் முதல்முத்தம்
ஐஸ் போலே, பட்டவுடன்
கூச்சம் தந்ததே !
அக்கம், பக்கம் சத்தம்
இவள் சக்கரை பேச்சில்
அக்கறை போகும் !
இவள் மிச்சம்வெச்ச எச்சில்
அது தேனீகள் சேர்க்கும்
தேனாய் மாறும் !
இந்த இளமையை கடந்திட
இவளின் விரல் பிடிக்க,
இந்த உலகத்தை மறந்து
காதல் சிறகடிக்க,
தனிமையே நீ விலகி போ
அவள் வருகிறாள் நீ மறைந்து போ !
இவன் கவிஞன்
உதயா காசி