புதுக்கவிதை
( இவன் - உதயகுமார் )
உள்தோற்றம்
பணிவாக இருக்கும் இடத்தில் பணிந்திடு
வினையாக தோன்றினால் வினையாகிடு
நல்லது நீ அறிந்து
தீமையை ஒழித்திடு
அமைதியான உனக்குள்
ஒரு மிருகம் இருப்பதை
நேரம் வரும்போது காட்டிடு !
தோற்றம் பூனை தான் , செயல் புலியடா !
வறுமையிலும் சுகம் உண்டு வசதியிலும் வலி உண்டு
இருப்பது எங்கே என்று இடம் அறிந்து
பிழைத்திட உனக்கென ஒரு வழி அமைத்திடு
ஆமை நீ என்றால் நீரிலும் ,நிலத்திலும் வாழ பழகிடு
ஒட்டகம் நீ என்றால் நீரை உனக்குள் சுமந்து நிலத்தின் மேல் பிழைத்திடு !