புது கவிதை
( இவன் - உதயகுமார் )
புகையின் கண்ணீர்
நீ என்னை விரும்புகிறாய்
நான் உன்னை விரும்புகிறேன்
உன்னால் நான் கரைகிறேன்
எனக்கு கொல்லி வைக்க நீ உண்டு
உனக்கு கொல்லி வைக்க நான்
இல்லை என்னும்ப்போது தான் நெஞ்சம் வலிக்கின்றது !
முதுமையின் அழகு
வெண்மை கூந்தல் , வெக்கத்தில் சிரிப்பு
சிதைந்த பற்கள் , சுருங்கிய தோல்
சுண்டிய ரத்தம் , தெளிவற்ற பார்வை
ஒலி உணரா செவிகள்
இது முதுமையின் ஓவியம்
இந்த ஓவியத்தின் பெயர்
விவசாயின் மகள் !