கலாம் ஐயா அவர்கள் சொன்ன 2020 வந்து விட்டது ஆனால் அவர் கனவு?
காலம் உள்ளவரை கலாம் ஐயா
அவர்களின் சிந்தனைகளும் ,அவரின் சாதனைகளும்
மறையாமல் மீண்டும் மீண்டும் மலர்போல மலர்ந்து கொண்டுதான் இருக்கும் .
அவர் கண்ட கனவு இந்தியா 2020 வல்லரசு ஆகவேண்டும் என்பதுதான்
அது இன்னும் கனவாக தான் உள்ளது . இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள் என்று என்றும் கூறியவர் ,அவரை விரும்பும் இந்த நாட்டை நேசிக்கும் நாம் அவரை தொடர்ந்து இந்தியா வல்லரசு ஆகும் வரை போராட வேண்டும், போராடுவோம் என உறுதிமொழி கொள்வோம் .